கோவைஸ் பவுண்டேஷன் என்பது அறிவு, நோக்கம் மற்றும் சமூகம் சார்ந்த அதிகாரமளிக்கும் அறக்கட்டளை என்பதன் விரிவாக்கம் ஆகும். கோவைஸ் பவுண்டேஷன் அறிவை பரப்பவும் மற்றும் காணுந்திறனை மனித உள்ளங்களில் கற்றுக்கொடுத்து அதன் மூலம் சமூகம் சார்ந்த அதிகாரமளித்தளை கிராமப்புற சமூகத்தில் கொண்டுவர உருவாக்கப்பட்டது.
நிறுவனர் திருமதி. சூர்ய நர்மதா இன்பவிஜயன் தோட்டக்கலை/ இசைவு தீர்வு ஆலோசகர் மற்றும் அரசு பதிவு பெற்ற நில மதிப்பீட்டாளர், கிராமப்புறங்களில் விழிப்புணர்வு மற்றும் அறிவுரை சேவைகளின் முக்கியத்துவத்தை அறிந்தே, இந்த அறக்கட்டளையை உருவாக்கினார்.
எங்கள் அறக்கட்டளை கிராமப்புற வளர்ச்சி, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப்புகட்ட, பயிற்சி அளிக்க மற்றும் மக்களுக்கு உரிய துறைகளில் விழிப்புணர்வு கொண்டு வர பல்வேறு துறைகளின் தொழில் வல்லுநர்களை உள்ளடக்கியது. பயனுள்ள நேர்மறையான அணுகுமுறைகளை மக்கள் மனதில் பரவசெய்வதன் மூலமாக அதிகாரமளிக்கும் திறனை கிராமப்புறங்களில் கொன்டுவருதல்.
நம் பாரம்பரிய விவசாய தகவல், உணவு மற்றும் கலாச்சாரத்தை ஆய்வுக்கூடம் ஆராய்ச்சியில் பெற்ற தகவல்களை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்தல்.
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு கல்வி/ பயிற்சி வாயிலாக புகட்டுதல்.
விவசாயிகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்துதல்.
வறுமைக்கோட்டில் உள்ள விவசாயிகள் அதிக வருமானங்கள் ஈட்டுவதற்கு, மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்களை தேர்ந்தெடுக்க உதவுவது.
விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்தல்.
விவசாயிகளை பலதரப்பட்ட சந்தையுடன் இணைத்தல்.