• கோவைஸ் பவுண்டேஷன் வேளாண் சபை

    செய்வதற்காக கற்றல் கற்பதை செய்தல்

    - விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து மேம்படுத்துதல்

வேளாண் கல்வி :

வேளாண் பொருட்களை உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் வரையிலான பாரம்பரிய மற்றும் அறிவியல் சார்ந்த விவசாய பயிற்சிகான தகவல்களை, புதுமையான தொழில்நுட்பம் மற்றும் சட்டம் நெகிழ்வுத்திறன் முதலியன எங்கு வேண்டுமாயினும் பயன்படுத்த கற்றுகொடுத்தல்.

கூட்டமைப்பு :

கோவைஸ் பவுண்டேசன் வேளாண் சபை உறுப்பினர்களின் கூட்டமைப்பு மூலம் எண்ணங்கள் பரிமாறுதல், நீதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு கொடுத்தல் மற்றும் தங்களுக்கிடையேயான வளங்களை பகிர்ந்துகொண்டு செழிப்பாக வாழ்தல்.

சந்தைக்கு ஏற்ற வகை விவசாயம்:

புதிய விவசாய அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல், உதாரணமாக உற்பத்தி இலாபகரமாக்குதல், வாழ்வாதாரம் முதல் வணீக ரீதியான விவசாயம், உள்ளூர் சந்தை முதல் ஏற்றுமதி சந்தை பற்றி அறிதல், ஒற்றை பயிரிடும் முறை முதல் பயிர் பன்முகத்தன்மை மற்றும் பல தகவல்கள் கேட்டறிதல்.

விவசாய இசைவு தீர்வு மன்றம்:

வேளாண் மற்றும் வேளாண் பொருட்கள் வியாபாரத்தில் ஏற்படும் விவாதம் மற்றும் வேறுபாடுகளை இசைவு மூலம் தீர்வு காணுதல்.

கோவைஸ் பவுண்டேஷன்

கோவைஸ் பவுண்டேஷன் என்பது அறிவு, நோக்கம் மற்றும் சமூகம் சார்ந்த அதிகாரமளிக்கும் அறக்கட்டளை என்பதன் விரிவாக்கம் ஆகும். கோவைஸ் பவுண்டேஷன் அறிவை பரப்பவும் மற்றும் காணுந்திறனை மனித உள்ளங்களில் கற்றுக்கொடுத்து அதன் மூலம் சமூகம் சார்ந்த அதிகாரமளித்தளை கிராமப்புற சமூகத்தில் கொண்டுவர உருவாக்கப்பட்டது.

நிறுவனர் திருமதி. சூர்ய நர்மதா இன்பவிஜயன் தோட்டக்கலை/ இசைவு தீர்வு ஆலோசகர் மற்றும் அரசு பதிவு பெற்ற நில மதிப்பீட்டாளர், கிராமப்புறங்களில் விழிப்புணர்வு மற்றும் அறிவுரை சேவைகளின் முக்கியத்துவத்தை அறிந்தே, இந்த அறக்கட்டளையை உருவாக்கினார்.

எங்கள் அறக்கட்டளை கிராமப்புற வளர்ச்சி, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப்புகட்ட, பயிற்சி அளிக்க மற்றும் மக்களுக்கு உரிய துறைகளில் விழிப்புணர்வு கொண்டு வர பல்வேறு துறைகளின் தொழில் வல்லுநர்களை உள்ளடக்கியது. பயனுள்ள நேர்மறையான அணுகுமுறைகளை மக்கள் மனதில் பரவசெய்வதன் மூலமாக அதிகாரமளிக்கும் திறனை கிராமப்புறங்களில் கொன்டுவருதல்.


‘KFCOA -ன் முதன்மை நோக்கம்
விவசாயிகள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள், அமைப்புகள், குழுக்கள், தொழில் முனைவோர், ஆலோசகர் அனைவரையும் ஒரு கூரைக்குள் கொண்டுவந்து தகவல் பரிமாற்றத்திற்கு ஒற்றுமைப் படுத்துதலே ஆகும்

கோவைஸ் பவுண்டேஷன் வேளாண் சபை

நம் பாரம்பரிய விவசாய தகவல், உணவு மற்றும் கலாச்சாரத்தை ஆய்வுக்கூடம் ஆராய்ச்சியில் பெற்ற தகவல்களை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்தல்.

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு கல்வி/ பயிற்சி வாயிலாக புகட்டுதல்.

விவசாயிகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்துதல்.

வறுமைக்கோட்டில் உள்ள விவசாயிகள் அதிக வருமானங்கள் ஈட்டுவதற்கு, மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்களை தேர்ந்தெடுக்க உதவுவது.

விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்தல்.

விவசாயிகளை பலதரப்பட்ட சந்தையுடன் இணைத்தல்.


KFCOA (Kovise Foundation Chamber of Agriculture) presently aims for Pan-India platform creation for farming entities to do smart farming and to attain self-sufficiency.

Our Contacts